உள்நாடு

கைவிட்ட போராட்டம் இன்று மீளவும் தொடர்கிறது

(UTV | கொழும்பு) –  வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகள் குழு சிறச்சாலையின் கூரையில் மேலே ஏறி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கைதிகள் தங்களுக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைக்குமாறு வலியுறுத்தியே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மேலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் நேற்று பிற்பகல் கீழே இறங்கி போராட்டத்தை கைவிட்டிருந்த நிலையில் மீண்டும் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி கைதிகளின் ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர், ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க கூறினார்.

இதற்கிடையில் வெலிக்கடை மற்றும் மஹர சிறைகளில் உள்ள கைதிகள் குழு உண்ணாவிரத போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குறிப்பிட்டு இரு தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன், இதன்போது வெலிக்கடை சிறைச்சாலையின் மரணதண்டனை கைதிகள் 12 பேர் சிறைச்சாலையின் கூரைமேல் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அது தொடர்பில் கைதிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்கள் கூறையை விட்டு நேற்று பிற்பகல் இறங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார்

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

இலங்கையில் 9வது மரணமும் பதிவு