உள்நாடு

MSC Messina : இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறியது

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்த வேளை தீப்பற்றிய எம்.எஸ்.சீ மெசினா (MSC Messina) என்ற கப்பல் தற்போது இலங்கைக்கு உட்பட்ட தேடல் மற்றும் மீட்பு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு சொந்தமான ரீ.சீ விகர் என்ற இயந்திரத்தின் உதவியுடன் குறித்த கப்பல் நேற்று மாலை இழுத்து செல்லப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்பரப்பின் கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து 480 கடல்மைல்களுக்கு அப்பால் பயணித்து கொண்டிருந்தபோது குறித்த கப்பலின் இயந்திர அறையில் தீப்பரவல் ஏற்பட்டது.

குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அந்த கப்பல் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இஸ்லாம் பாடநூல்களை உடனடியாக மீளப் பெறுமாறு கோரிக்கை

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம்!

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு