(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு முன்னரை போன்றே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் மாத்திரமே செயற்படும்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாண எல்லைகளை தாண்டி அத்தியாவசிய சேவைகளுக்காக சில பொது போக்குவரத்துக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்குமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்.
இந்த சூழலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கொவிட் தொடர்பிலான ஜனாதிபதி செலணியில் இதுகுறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.