விளையாட்டு

டக் வத் லுவிஸ் முறையில் வெற்றி

(UTV |  இங்கிலாந்து) – இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 போட்டி நேற்று (24) நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை பெற்ற வேளையில் மழை குறிக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது.

இறுதியில் டக் வத் லுவிஸ் முறையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 1 வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல் முறையாக காலிறுதியில் இந்திய மகளிர் அணி

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 541 ஓட்டங்கள்

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து