உள்நாடு

MV Xpress pearl : தீப்பரவலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவி

(UTV | கொழும்பு) –  எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை அடுத்து இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்குகின்றது.

இந்த உதவி தொகையின் ஊடாக 15,000 பேர் நன்மையடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் தீ ஏற்பட்டதையடுத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, பாணந்துறை மற்றும் மாத்தறை பகுதி மீனவர்கள் இந்த உதவியின் கீழ் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நிதியுதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், நாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் காணப்படும் அபாயகரமான நச்சுப் பொருட்களை சுத்தம் செய்வதற்கும் இதனூடாக உதவி வழங்கப்படவுள்ளது.

துப்பரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு தேவையான பாதுகாப்பு பயிற்சி மற்றும் பொருட்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரச மருந்து சீட்டுகளுக்கு “ஒசுசல” இல் இலவச மருந்து

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் IMF விசேட அறிக்கை!

முகக்கவசங்களுக்கான அதிக பட்ச சில்லறை விலை – வர்த்தமானி வௌியானது