உள்நாடு

இன்று முதல் அமுலாகும் நாடாளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – நாடாளாவிய ரீதியாக இன்று(23) இரவு 10 மணி முதல் 30 மணித்தியாலங்கள் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதுடன், வார இறுதி நாட்களில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

Related posts

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஆராய்கிறது

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

ஐக்கிய மக்கள் சக்தியின்  ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 32 கோடி ரூபாவுக்கும் அதிகமான  நிதி!