உள்நாடு

ரவி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு

(UTV | கொழும்பு) –    முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜுலை மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி ஏலத்தில் அரசாங்கத்திற்கு உரித்தான 1500 கோடி ரூபா பணத்தை, முறையற்ற விதத்தில் கையாண்டமை உள்ளிட்ட 22 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெலிகம மத்ரஸாவில் தீப்பரவல்!

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது தாக்குதல் – 4 பேர் காயம்.

editor

தமிழ் அரசியல்வாதிகளின் மெளனம் : கல்முனையில் வலுக்கும் போராட்டம் : அரச ஊழியர்கள் இணைவு