உள்நாடு

பாராளுமன்ற இன்று கூடுகிறது

(UTV | கொழும்பு) –  இன்றைய பாராளுமன்ற அமர்வில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூலம் மற்றும் காணி எடுத்தல் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்கு விதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாளைய தினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான 2 ஒழுங்கு விதிகளும் இதன்போது விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வார நாடாளுமன்ற அமர்வு, இன்றும், நாளையும் என இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறை நீடிப்பு

அரச அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவுகள் நிறுத்தம்

இலங்கையில் முதலாவது புதிய கொவிட் 19 தொற்றாளர் அடையாளம்