(UTV | கொழும்பு) – பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த வாரம் முதல் வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி சுமார் 6,000 பேருந்துகளை அடுத்த வாரம் முதல் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வழமை போன்று பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.
மாகாணங்களுக்குள் தேவையான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.