உள்நாடு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 1,996 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 201,389 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 237,661 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,534 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ரணில் பாராளுமன்றத்தின் நடைமுறைகளை மீறியுள்ளார் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor

விமான நிலையங்கள் 22ம் திகதி முதல் திறப்பு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 793 பேர் கைது