உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ரணில் விக்ரமசிங்கவை பெயரிட்ட ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சஜித் – அனுர விவாதம் : ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு இரத்து

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிட்ரோ லங்கா

எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி முன்னெடுப்பேன்