உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, மற்றுமொரு சந்தர்ப்பம்

(UTV | கொழும்பு) –    பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னரும், 2021ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, சந்தர்ப்பம் வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்காக இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் (18) நிறைவடைகின்றது.

அத்துடன், இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரை விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு, பயணக்கட்டுப்பாடு தளர்ப்பட்டதன் பின்னர் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

13 ஆம் திகதி விடுமுறை இல்லை – ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கை.

முன்னாள் பிரதமருக்கு அழைப்பு