உள்நாடு

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன்

(UTV | வொஷிங்டன்) –  இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராகவும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மத்தியக் கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கம்

இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 164 மாணவர்கள்

ரஞ்சன் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை