உள்நாடு

தரம் 11, 13 மாணவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை

(UTV | கொழும்பு) –  பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகள் கட்டங்கட்டமாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் தலைமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது குழந்தைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை நாடுமாறு பிரதமர் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது தடுப்பூசி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டால் அதற்கு தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த திட்டம் வெற்றிபெற வேண்டுமாயின் ஆரம்பக்கட்டமாக 270,000 ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி சேனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறும் – பசில்

சரத்தின் முழியே இனவாதம் : பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாம்

இம்மாதத்துடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்