(UTV | கொழும்பு) – எம்வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு என்பவற்றிற்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேலதிகமாக சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.