உள்நாடு

சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்

(UTV | கொழும்பு) –  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பு என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

மேலும் நாட்டை மீண்டும் திறக்கும் முடிவு மக்களின் செயற்பாடுகளால் மாற்றப்பட்டது. மக்கள் சரியான முறையில் செயற்பட்டால், நாட்டை உரிய திகதியில் திறக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 40 பேர்

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளது திகதிகள் வெளியீடு

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சஷீந்திர ராஜபக்க்ஷ