கிசு கிசு

எரிபொருள் வலையில் சிக்கிய கம்மன்பில

(UTV | கொழும்பு) – பொது மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளது.

மக்கள் நலன் சார்ந்த அரசாங்கமானது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தவறியுள்ளதன் மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததன் மூலம், இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு மற்றுமொரு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடாது எனவும் இந்நிலைமை மாற வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இதற்கு நேரடி பொறுப்புக்கூற வேண்டும் எனவும், இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியமைக்கான முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படவுள்ள கிரிக்கெட் வீரர்கள்

குழந்தை பிறப்பதை லைவ் ஆக காட்ட காத்திருக்கும் பிரபல நடிகை…

“பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் : பீப் ஒலியில் பொன்சேகா – சமல் மோதல் [VIDEO]