(UTV | ஹொங்கொங்) – கொரோனா நோயாளிகளைக் கவனிப்பதற்காக புதிய வகை ரோபோவை ஹொங்கொங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரோபோவுக்கு அவர்கள் கிரேஸ் என்று பெயரிட்டுள்ளனர். முதியவர்கள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
தாதிமார்களைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன.
இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் உள்ளகருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளை எளிதில்கண்டறிகிறது.
இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.