(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 67,615 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதல் செலுத்துகை நேற்று(10) செலுத்தப்பட்டது.
அதே தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை 25,451 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை நேற்று 342 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி எவருக்கும் செலுத்தப்படவில்லை.
இறுதியாக கடந்த 3ஆம் திகதி ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேவேளை, கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் செலுத்துகை 925,242 பேருக்கும், இரண்டாவது செலுத்துகை 354,993 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.