உள்நாடு

பயணக்கட்டுப்பாடு : இன்று அல்லது நாளை தீர்மானமிக்கது

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை(14) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்திருந்தார்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும். அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு அமையவே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

அதிக விலை கொடுத்து முட்டையை வாங்க வேண்டாம்

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு SLPP தீர்மானம்.

இன்றும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை