உள்நாடு

காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – அன்டிஜன் பரிசோதனையில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பாராளுமன்ற உறுப்பினரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று (10) வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியுள்ளமையும் குறிபப்பிடத்தக்கது.

-வவுனியா தீபன்-

Related posts

சம்பள உயர்வு அல்லது 20 ஆயிரம்- நாடளாவியரீதியில் போராட்டம்

சாரதிகளுக்கான அறிவித்தல்!

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் – மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!