உள்நாடு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்கின்றனர்

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று (10) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

ஆணைக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய, நியமிக்கப்படவுள்ள உயர் பதவிகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் ஆணைக்குழு முழுமையாக செயற்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன குறிப்பிட்டார்.

கடந்த 31 ஆம் திகதி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையிலான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் மேலும் ஆறு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்துவிக்ரம, இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்ரமசூரிய, ஓரல் கோப்பரேஷனின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான குஷான் கொடித்துவக்கு, மெர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் ( & ) பினான்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஜெராட் ஒன்டச்சி, மெக்லரன்ஸ் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரொஹான் டி சில்வா ஆகியோர் துறைமுக நகர ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வித்துறை மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்

தேர்தல்கள் செயலகத்தில் இன்றும் கலந்துரையாடல்

உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்