(UTV | கொழும்பு) – ஜனாதிபதி அலுவலகம் உள்ளடங்களாக சில அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் ரஜீவ் மத்தியு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.
தான் வெளியிட்டிருந்த தகவலில் ‘தவறு’ இருப்பதாக நேற்று முன் தினம் வருத்தம் வெளியிட்டிருந்த போதிலும் இதனூடாக மக்களை தவறாக வழி நடாத்த முனைந்ததாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் உட்பட பல அரச நிறுவனங்களது இணையங்கள் ஹக் செய்யப்பட்டதாக இவர் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.