உலகம்

கடுகதி ரயில் விபத்தில் 36 பேர் பலி

(UTV |  இஸ்லாமாபாத், பாகிஸ்தான்) – பாகிஸ்தானில் 2 கடுகதி ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 36 பேர் பரிதாபமாக பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.

தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது கடுகதி ரயிலும், மில்லத் கடுகதி ரயிலும் இன்று காலை நேருக்கு நேர் மோதியுள்ளன.

இந்த சம்பவத்தில் 36 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்டத்தின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடம் புரண்டதற்கும் அடுத்தடுத்த மோதலுக்கும் என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை எனவும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலக சுகாதார நிறுவனத்திற்கு காலக்கெடு

குவைத்தில் நாளை முதல் ஊரடங்கு

ரஷ்யா விமானங்கள அமெரிக்கா வான்பரப்பில் பறக்கத் தடை