உள்நாடு

MV XPress pearl : 20 பேரிடம் வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் அக் கப்பலின் குரல் தரவு பதிவு சாதனமானது voice data recorder, குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சரக்குக் கப்பல் தொடர்பான நிறுவனம் ஊடாக இந்த சாதனம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கப்பல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இந்த குரல் பதிவு தரவுகள் அவசியமானதென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை

ஹிருணிகாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

தனிமைப்படுத்தல் மற்றும் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்