உள்நாடு

ரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகியுள்ளார்.

அதனையடுத்து நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகும் இரண்டாவது நீதியரசர் இவர் ஆவார்.

ஏலவே, ஏப்ரல் 21 தாக்குல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகித்தமையினால் நீதியரசர் ஜனக் டீ சில்வா தாம் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக கடந்த 28ம் திகதி தெரிவித்திருந்தார்.

குறித்த மனு எதிர்வரும் 11ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

பொதுமக்கள் பார்வைக்கூடம் தற்காலிகமாக பூட்டு

அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்