உள்நாடு

மாதவி எந்தனி மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் சந்திமால் ஜயசிங்கவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கேற்ற மேலும் 6 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சந்திமால் ஜயசிங்கவின் தாய், நடிகர் ஜெக்சன் எந்தனியின் மகள் மாதவி எந்தனி மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட ஆறு பேர் உள்ளடங்குகின்றனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குற்றத்திற்காக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டு அதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை – மஹிந்த

editor

இரண்டு வாரங்களில் O/L பரீட்சை பெறுபேறுகள்

editor

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!