கிசு கிசு

அரச இணையத்தளங்களின் முடக்கம் : எது உண்மை?

(UTV | கொழும்பு) – இலங்கையில் உள்ள 6 இணையத்தளங்களில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதே தவிர சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட மேலும் சில இணையத்தளங்களில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளங்களை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) ஈடுபட்டு வருகிறது.

இதேவேளை, நேற்று முன்தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த 6 இணையத்தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் குறித்த இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் இடம்பெறவில்லையென்றும் அவை தொழிநுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு ஒருங்கிணைப்பு மையத்தின் தகவல் உண்மைக்கு புறம்பானதா எனக் கேள்வி எழுப்பும் வகையில் இலங்கை, தகவல் தொழில்நுட்ப சங்கம் இன்று ஊடக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அதில் ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தள முகவரி பிறிதொரு டேட்டிங் தளத்திற்கு பிரவேசிப்பதும் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கை, தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் ஊடக அறிக்கை;

  

Related posts

கொழும்பு சூதாட்ட நிலையத்தில் நடனமாடும் நமீதா

இலங்கை பெண்ணிற்காக மோதும் வெளிநாட்டவர்கள்

YouTube நிறுவனத்திற்கு 200 மில்லியன் அபராதம்