உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே மின் ஆலையில் ஏற்பட்ட மின்சார செயலிழப்பு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொலன்னாவை நகர சபை பிரதேசம், மொரகஸ்முல்லை, ராஜகிரிய பிரதான வீதி மற்றும் ராஜகிரிய முதல் நாவலை வரையான அனைத்து கிளை வீதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மின்சார மறு சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்வு

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை