உள்நாடு

MV Xpress pearl : ரோஹித தலைமையில் விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – மூழ்கி கொண்டிருக்கும் எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலின் தற்போதைய நிலை தொடர்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் துறைமுக அமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி பணிமனை ஆகியவற்றின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு