உலகம்

உலகில் முதன் முறையாக சீனாவில் மனிதருக்கு பரவிய H10N3 பறவை காய்ச்சல்

(UTV |  பெய்ஜிங், சீனா) – சீனா பரப்பிய கொரோனாவில் இருந்து இன்னும் உலகம் விடுபடாத நிலையில், இப்போது, உலகின் முதல் முதலாக சீனாவில் இருவருக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் உலகில் பீதியை கிளப்பியுள்ளது.

சீனாவின், ஜென்ஜியாங் (Zhenjiang) நகரத்தைச் சேர்ந்த 41 வயதான நபருக்கு H10N3 பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக, அந்நட்டின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.. இருப்பினும் ஜென்ஜியாங் நகரத்தைச் சேர்ந்த 41 வயதான இந்த நோயாளியின் உடல் நிலை சீராக உள்ளதாக அரசு நடத்தும் சிஜிடிஎன் (CGTN TV) டிவி தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்கு ஜியாங்சு (Zhenjiang) மாகாணத்தில் இருந்து H10N3 பறவைக் காய்ச்சலால் உலகின் முதல் மனித நோய்த்தொற்று ஏற்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன சுகாதார அதிகாரிகள் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து அஞ்ச வேண்டியதில்லை என்றும், இந்த தொற்று கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்றும், இது பெருந்தொற்றாக மாறும் அபாயம் மிகக் குறைவு என்றும் கூறினார்.

பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ள நோயாளிக்கு மே 28 அன்று எச்10என்3 (H10N3) பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் தேசிய சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில், அந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை விவரிக்கவில்லை.

எச்10என்3 ( H10N3) மனித நோய்த்தொற்று ஏற்பட்டதாக, இதற்கு முன்னர் உலகளவில் பதிவாகவில்லை. H10N3 என்பது கோழிப்பண்ணையில் காணப்படும் நோய்க்கிருமி எனவும், ஒப்பீட்டளவில் குறைவான வீரியம் கொண்ட விகாரமாகும், மேலும் இது பெரிய அளவில் பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு எனவும் கூறப்படுகிறது.

Related posts

சுட்டெரிக்கும் வெயில் – ஒரே வாரத்தில் 719 பேர் பலி

தோஹா – வர்த்தக மையத்தில் தீ பரவல்

APLLE பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !