(UTV | புதுடெல்லி) – எதிர்வரும் 2024 முதல் 2031ஆம் ஆண்டு வரையிலான ஐ.சி.சி ஆடவர் உலகக்கோப்பை மற்றும் டி-20 போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு ஒக்டோபரில் இந்தியாவில் சர்வதேச டி-20 போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலினால், ஐ.பி.எல் போட்டிகளே இடைநிறுத்தப்பட்டு, எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்விகள் பலத்த குரலில் எழும் சமயத்தில் ஐ.சி.சி 2031 ஆண்டு வரையிலான சர்வதேச ஆடவர் போட்டி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ICC announces expansion of global events.
Details 👇https://t.co/q58H2CYzRK
— ICC (@ICC) June 1, 2021
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்படாவிட்டால், டி-20 உலகக்கோப்பை போட்டியும் ஐக்கிய அரசு அமீரகத்திலேயே நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் ஒக்டோபர் மாதத்தில் தான் டி20 உலகக்கோப்பை நடக்கும் என்பதால், ஐ.சி.சி, பிசிசிஐ-க்கு ஜுன் 28ம் திகதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.
ஐ.சி.சி ஆண்களின் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐ.சி.சி ஆண்களின் டி 20 உலகக் கோப்பை இரண்டும் விரிவுபடுத்தப்படும் என்றும், ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் அறிமுகப்படுத்தப்டும் என்றும் கூறிய ஐ.சி.சி வாரியம், 2024-2031 முதல் ஐ.சி.சி வரை நடைபெறவிருக்கும் போட்டிகளின் அட்டவணையை இன்று உறுதிப்படுத்தியது.