விளையாட்டு

மன அழுத்தத்தை குறைக்கவே ‘ஹெட் போன்’ அணிந்திருப்பேன் – ஒசாகா

(UTV |  பாரிஸ்) – மன அழுத்தம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து வெளியேறிய ஒசாகாவிற்கு பல பிரபலங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனனர்.

ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா 23. உலக தரவரிசையில் ‘நம்பர்–2’ இடத்தில் உள்ளார். கடந்த 2018, 2020 யு.எஸ்., ஓபன், 2019, 2021ல் ஆஸ்திரேலிய ஓபன் என இதுவரை நான்கு கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றுள்ளார். இதனிடையே பிரெஞ்ச் ஓபன் தொடரில் பங்கேற்க பாரிஸ் வந்த ஒசாகா, ‘தற்போதுள்ள மனநிலையில் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாது,’ என்றார்.

முதல் சுற்றில் ருமேனியாவின் பாட்ரிசியாவை வென்ற பின், களத்தில் மட்டும் பேட்டி கொடுத்தார். அடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்தார். இவருக்கு ரூ. 11 லட்சம் அபராதம் விதித்தது. தனது முடிவில் ஒசாகா உறுதியாக இருந்தால், அடுத்தடுத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. தற்போது பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து விலகினார் ஒசாகா.

இதுகுறித்து ‘டுவிட்டரில்’ அவர் வெளியிட்ட செய்தி:

கடந்த 2018 யு.எஸ்., ஓபன் தொடரில் இருந்து மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறேன். இதை சமாளிப்பது கடினமாக உள்ளது. சமூகத்தை எதிர்கொள்ளும் போது ஏற்படும் அழுத்தத்தை குறைவாக வேண்டும் என்று தான் அடிக்கடி ‘ஹெட் போன்’ அணிந்திருப்பேன். பத்திரிகைகள் எப்போதும் என்னிடம் கருணையுடன் தான் நடந்தன.

யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். உலக மீடியாவில் பேசும் போது ஒரு பதட்டம், அழுத்தம் எழுகிறது. பாரிசிலும் அப்படித் தான் உள்ளது. இதனால் தான் ‘மீடியாவை’ தவிர்க்க முடிவு செய்தேன். தற்போது இத்தொடரில் இருந்து விலகுகிறேன். தவிர தொடரில் பங்கேற்கும் மற்ற நட்சத்திரங்களுக்கு என்னால் கவனச் சிதறல் வந்து விடக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளேன். இதற்கான மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து விலகிய ஒசாகாவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் பிரபலங்கள் கருத்து  தெரிவிக்கையில்;

செரினா வில்லியம்ஸ் – ஒசாகாவுக்காக வருத்தப்படுகிறேன். ஒவ்வொருவரும் ஒரே மாதிரி இருக்க மாட்டர், ஒவ்வொரு விஷயத்தை வித்தியாசமாக கையாளுவர். ஒசாகாவை பொறுத்தவரையில் எது சிறந்த வழி முடிவு செய்ய அவரால் முடியும். அவருக்கு பிடித்ததை செய்கிறாள் என நினைக்கிறேன்.

பில்லி ஜீன் கிங் – மன அழுத்தத்தால் அவதிப்படுவதை துணிச்சலாக தெரிவித்துள்ளார் ஒசாகா. இதில் இருந்து மீண்டு வர அவருக்கு கால அவகாசம் தர வேண்டும்.

மார்டினா நவரத்திலோவோ – நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்.

Related posts

அசந்த டி மெல் இராஜினாமா

கொரோனா : விளையாட்டுத் துறை அமைச்சினால் அறிவுறுத்தல்

ஐபிஎல் வீரர்களுக்கும் தடுப்பூசிதான் ஒரே வழி