கேளிக்கை

விருதை திருப்பி அளித்த ‘பிக்பொஸ் பாலாஜி’

(UTV | சென்னை) –  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் பாலாஜி முருகதாஸ். மொடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் பிக்பொஸ் நிகழ்ச்சியில், இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடம் பிடித்தார்.

இந் நிகழ்ச்சியின் மூலம் பெண் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் யூட்டியூப் சனலின் கோல்ட் மெடல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அதில் பாலாஜி முருகதாஸுக்கு விருது கொடுக்கப்பட்டது மற்றும் அவர் மேடையில் 2 நிமிடங்கள் பேசியது என எதுவுமே ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதற்கு மேடையிலிருந்த பிஹைண்ட்வுட்ஸ் ரிவியூவரை (பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்) அவர் விமர்சித்து பேசியதே காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த பாலாஜி முருகதாஸ் “நான் விருது வாங்கியதையோ அல்லது நான் பேசியதையோ ஒளிபரப்பாத உங்களின் விருது எனக்கு எதற்கு” என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு கொடுத்த விருதையும் திருப்பி தருவதாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது இப்பதிவானது பிக்பொஸ் மற்றும் பாலாஜி முருகதாஸ் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பிரபல நடிகர்களின் வழியில் புதிய அவதாரம் எடுக்கும் கமல்!!

ஓ.டி.டி தளத்தில் மாஸ்டர்

காதலியை மணந்த வில்லன்