(UTV | கொழும்பு) – தனக்கு பிணை வழங்கக் கோரி மொரட்டுவை நகர சபை தவிசாளர் லால் பெர்ணான்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்றின்போது, வைத்திய அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைத்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் சந்தேகநபரான நகரசபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.