(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலின் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இன்றைய தினம் கொழும்பு துறைமுகப் பொலிஸாரினால் வாக்குமூலம் பெற இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.