விளையாட்டு

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய ‍ நேற்றைய தினம் (28) தெரிவித்தார்.

பிற்போடப்பட்டுள்ள இந்தத் தேர்தலை ஜூன் மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 31 ஆம் திகதி ‘சூம்’ தொழில்நுட்ப வசதியுடன் நடத்தப்படவிருந்த இலங்கை ஹொக்கி சம்மேளன தேர்தலுக்கு, தடை உத்தரவு பிறப்பித்துள்ளதன் காரணமாக, அன்றைய தினம் நடத்தப்படவிருந்த இலங்கை ஹொக்கி சம்மேளனத் தேர்தல் நடத்த முடியாது என பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்தார்.

Related posts

மீண்டும் ஒரு நாள் அணியில் தினேஷ் சந்திமால்

இலங்கை-தென்னாபிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டி இன்று(13)

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!