கேளிக்கை

சூர்யாவின் 40

(UTV |  சென்னை) – சூர்யா 40 படம் எப்படி இருக்கும் என இயக்குனர் பாண்டிராஜ் டிவிட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் பாண்டிராஜ். அப்போது ரசிகர்கள் அவரிடம் சூர்யா 40 படம் எப்படி இருக்கும் எனக் கேட்டப்போது ‘எப்படி கடைகுட்டி சிங்கம் ஒவ்வொரு காட்சியும் கொண்டாடும் படி இருந்ததோ அதே போல கொண்டாடக் கூடிய படமாக சூர்யா 40ம் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

Related posts

நயன்தாராவை ஏன் பிடிக்கும்?

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்