விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அன்வர் அலிக்கு கொரோனா

(UTV |  இஸ்லாமாபாத்) – பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் தள்ளிவைக்கப்பட்ட 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கராச்சி மற்றும் லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு அபுதாபி செல்கிறார்கள். அங்கு அவர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கு செல்வதற்காக லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட அபுதாபி செல்ல முடியாது. முன்னதாக கிளாடியட்டர்ஸ் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாததால் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டார். முல்தான் சுல்தான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அதிரடி வீரர் அப்ரிடி முதுகுவலி காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

Related posts

அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

நாணயற் சுழற்சியில் இலங்கை வெற்றி

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்