உள்நாடு

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு

(UTV |  களுத்துறை) – களு கங்கை ஊடறுத்து செல்கின்ற பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக குறித்த கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் இரத்தினபுரி, நிவித்திகல, பெல்மடுல்ல, கஹாவத்தை மற்றும் எலபாத்த ஆகிய இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

நளின் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும்- பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர்.

அரச பகுப்பாய்வு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு [VIDEO]