(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்காக இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடு அடுத்த மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக பயணக்கட்டுப்பாடு இன்றிரவு 11 மணி வரையில் தளர்த்தப்பட்டிருக்கும்.
இன்றிரவு 11மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாடானது எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.
எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அதன்பின்னர் 31 ஆம் திகதி இரவு 11மணி முதல் அடுத்த மாதம் 4 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
இதனையடுத்து அன்றைய தினம் இரவு 11மணி முதல் அடுத்த மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4மணி வரை பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் இன்றைய தினமும், எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜூன் மாதம் 4ஆம் திகதிகளில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியும்.
இதற்காக, இந்த மூன்று தினங்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் உள்ள சகல வெதுப்பகங்கள், சில்லறை விற்பனையகங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்படும்.