விளையாட்டு

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வீழ்ந்தது இலங்கை

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் முஸ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களையும், மஹ்மதுல்ல 54 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொண்டார்.

பந்து வீச்சில் மொஹமட் ஹசன் 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

 

Related posts

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி : ஒளிபரப்ப தடை விதித்த தலிபான்

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு