உலகம்

மரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி

(UTV |  சீனா) – வடக்கு சீனாவின் ஒரு மலைப்பகுதியில் நடைபெற்ற 100 கி.மீ (62 மைல்) அல்ட்ரா மரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 ஓட்டப்பந்தய வீரர்கள் உறைபனி மழை மற்றும் அதிக காற்று வீசியமையினால் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் கன்சு மாகாணத்தின் பெயின் நகரில் அமைந்துள்ள மலைப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் (04:00 GMT) நடைபெற்ற அல்ட்ராமரத்தான் போட்டியில் 170 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உண்டான தீடீர் வானிலை மாற்றம் காரணமாகவே 21 பங்கேற்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாகினர்.

அதேநேரம் பங்கேற்பாளர்களில் சிலர் காணாமல் போயுள்ளதுடன், அனர்த்தத்தில் சிக்குண்ட வீரர்களை கண்டுபிடிக்க 700 க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மற்றும் இராணுவ வீரர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மராத்தான் பந்தயத்தில் மொத்தம் 172 பேர் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 9,000 உக்ரைன் இராணுவ வீரர்கள் பலி

எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை

கரீபியன் தீவில் சுனாமி எச்சரிக்கை