உள்நாடுவிளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியில் மூவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு குறித்த மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் சகலதுறை ஆட்ட வீரர் இசுறு உதான மற்றும் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஸிரான் பெர்ணான்டோ ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸிற்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் மூவரும் இன்று மீண்டும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

‘இடுகம’ நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு [PHOTOS]

இலங்கையுடன் மோதவுள்ள பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு