உலகம்

ஏர் இந்தியா மீது சைபர் தாக்குதல்

(UTV | இந்தியா) – ஏர் இந்தியாவின் இணைய தளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சைபர் தாக்குதல் குறித்து தெரியவருவதாவது, பயணிகளின் தரவுகளை சேமித்து வைக்கும் சேவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதலில் பயண விவரங்கள், கிரெடிட் அட்டை தகவல்கள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட் ) தகவல் போன்றவை கசிந்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா கூறுகையில், 2011 முதல் பெப்ரவரி 2021 வரை பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களே இவ்வாறு கசிந்துள்ளதாகவும், அதில் பெயர், பிறந்த திகதி, தொடர்புத் தகவல், கடவுச்சீட்டு தகவல் (பாஸ்போர்ட்) , டிக்கெட் தகவல், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவில் அடிக்கடி பயணிக்கும் பயணியர் தகவல்கள், அத்துடன் கிரெடிட் அட்டைகளின் விவரங்களும் கசிந்துள்ளன. கடந்த பெப்ரவரி மதம் இந்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய இரகசிய இலக்கம் (பாஸ்வேர்டை) மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த உளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு!

அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான்

சித்தரவதை முகாமாக இருக்கும் குவான்தனாமோ சிறை