உலகம்

ஜோ பைடனுக்கு மெழுகுச்சிலை

(UTV |  வொஷிங்டன்) – அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மெழுகுச்சிலை அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள க்ரிவின் என்ற மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை, சிலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் ஜோ பைடன் அவர்களே அங்கு நிற்பதைப் போன்று அச்சு அசலாக இருப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த சிலையை வடிவமைத்த கலைஞர்களுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய பிரபலங்கள் உள்பட பல உலகப் பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  

Related posts

இன்று முதல் Sputnik V கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

அவுஸ்திரேலிய பேராசிரியர் கலாநிதிலுக்மான் தாலிபின் ஊடக அறிக்கை

“கட்டார் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு” புதிய தடை