(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள், மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படவுள்ளன.
இதனையடுத்து, மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மீள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு மேலும் தொிவித்துள்ளது.