(UTV | புரூணை) – தெற்காசியா முழுவதும் கொவிட்-19 பரவல்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து புரூணை, தனது பயணத் தடை பட்டியலில் பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை புதிதாக இணைத்துள்ளது.
மே 17 முதல் புரூணையில் நுழைவதற்கு நான்கு வெளிநாடுகளில் இருந்து புறப்படும் அல்லது பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் தடை செய்யப்படுவார்கள் என்று அந் நாட்டு பிரதமர் அலுவலகம் திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் B.1.617 கொவி-19 மாறுபாடு காரணமாக குறைந்தபட்சம் எதிர்வரும் ஜூன் 13 வரை இந்தியாவிற்கான புரூணையின் பயணத் தடை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து புரூணைக்குள் நுழைவதற்கு முன்னர் ஒப்புதல் வழங்கப்பட்ட வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்த தடையுத்தரவு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.
எனினும் மேற்கண்ட ஐந்து நாடுகளிலிருந்து புறப்படும் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் புருனேவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
புரூணை போர்ணியோத் தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது வடக்கில் தென் சீனக் கடலாலும் ஏனைய பக்கங்களில் மலேசியாவின் சறவாக் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.