(UTV | கொழும்பு) – தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கொவிட் சிகிச்சை மையங்களில், கொவிட் தொற்றாளர்களை அனுமதிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அறிகுறிகள் அற்ற கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க இன்று(17) முதல் அனுமதி வழங்கப்படும் என அண்மையில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.
எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.