விளையாட்டு

வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்

(UTV |  சென்னை) – இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடக்க இருக்கும் தி ஹண்ட்ரட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்.

இந்திய அணியில் மிக நீண்ட காலமாக தனக்கான இடத்துக்காக போராடியவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வரவால் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில் அவருக்கு சிக்கல் எழுந்தது. இதனால் அவ்வப்போது இடம் கிடைப்பதும், பின்னர் அணிக்கு வெளியே உட்கார வைக்கப்படுவதாகவும் இருந்தார்.

ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது இங்கிலாந்தில் நடக்க உள்ள தி ஹண்டரட் என்ற புதுமையான தொடரில் இவர் வர்ணனையாளராக பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன், பிளிண்டாப், கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், டேரன் சமி உள்ளிட்டோரும் வர்ணனையாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

 

Related posts

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ரொபின் உத்தப்பா ஓய்வு

இலங்கை ஜூடோ அணி சார்பாக சாமர

இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி